கோவை தொழிலதிபரை கடத்த முயன்ற வழக்கு: பெங்களூரில் இருந்து மூவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்

X
கோவை தொழிலதிபர் இனாயதுல்லாவை கடத்தும் முயற்சியில் தொடர்புடைய வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிச்சன் புகாரி, அஸ்கர் அலி மற்றும் ஜுல்பிகர் அலி ஆகியோர், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கோவை 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் மொத்தம் 12 பேர் மீது கூட்டுச் சதி மற்றும் கடத்தல் முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் சேர்க்கப்பட்ட கோவையைச் சேர்ந்த ஆறு பேர் நீதிமன்றத்தில் ஆஜரானனர். அப்துல்லா, ஃபெரோஸ், செட் ஆகிய மூன்று பேர் ஆஜராகவில்லை. நீதிபதி வெர்ஜினி வெஸ்டா தலைமையில் நடைபெற்ற விசாரணையில், கைதிகள் உறவினர்களை சந்திக்க அனுமதி கோரப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பின் மூவரும் மீண்டும் பெங்களூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Next Story

