ஆடி அமாவாசை - கோவையில் தர்ப்பண மண்டபத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு !

ஆடி அமாவாசையை ஒட்டி பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, கோவை பேரூரில் நொய்யல் ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி, முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பொதுமக்கள் வசதிக்காக ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தர்ப்பண மண்டபத்தில், நல்அறம் அறக்கட்டளை ஏற்பாடு செய்த பித்ரு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் அதிகாலை முதலே படையல், தர்ப்பை புல், சாதம் உள்ளிட்டவை கொண்டு பூஜை செய்து, அவற்றை ஆற்றில் வைத்து மூதாதையரை வணங்கினர். தொடர்ந்து விநாயகர் கோவில், சப்த கன்னியர் மற்றும் பட்டீஸ்வரர் கோவிலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். பெருந்திரளான பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், காவல்துறையினர் வாகனங்களை தடுத்து வழிவகைசெய்தனர்.
Next Story