நாட்டு வெடி, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி

X
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எக்ஸ்போ சிட்டி பகுதியில் வசிப்பவர் பாண்டியராஜன் (வயது 53). ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறார். இவர் திண்டுக்கல் -திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே கூட்டுறவு சொசைட்டிக்கு சொந்தமான கறிக்கடை உள்ளது. வயது மூப்பு காரணமாக கறிக்கடையை தனது உறவினரான நாகபாண்டி என்பவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உள் வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் நாகபாண்டி கடந்த ஐந்து வருடங்களாக கடைக்கு வாடகை பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். கடையை காலி செய்யுமாறு பாண்டியராஜன் நாகப்பாண்டியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று 24/7/25 நாக பாண்டி முகமூடி அணிந்து கொண்டு சமையலறைக்குள் நாட்டு வெடி மற்றும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். மேலும் வீட்டின் முன்பக்கம் உள்ள கேட் பகுதியில் பெட்ரோல் ஊற்றி, நாட்டு வெடியை வீசி பற்ற வைத்துள்ளார். வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த நாகபாண்டி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். பாண்டியராஜன் குடும்பத்தினர் சமையல் அறையில் எரிந்த தீயை அணைத்தனர். இது தொடர்பாக பாண்டியராஜன் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகபாண்டியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

