மண்டிகடை அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது சுற்றுலா வேன் மோதி விபத்து,

மண்டிகடை அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது சுற்றுலா வேன் மோதி விபத்து,
மண்டிகடை அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது சுற்றுலா வேன் மோதி விபத்து, கரூர் மாவட்டம் , மண்மங்கலம் , அண்ணாநகர் , கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி வயது 55. இவர் ஜூலை 24ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் கரூர் - சேலம் சாலையில் பெரியாண்டாங் கோவில் மண்டி கடை அருகே நடந்து சென்றவர் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருப்பூர் மாவட்டம் , ஊத்துக்குளி , சாலை தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் வயது 45 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சுற்றுலா வேன் நடந்து சென்ற ராமமூர்த்தி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமமூர்த்தியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த ராமமூர்த்தியின் உறவினர் சுந்தர்ராஜ் வயது 47 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சுற்றுலா வேனை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரமேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story