மானிய விலையில் தக்கை பூண்டு

மானிய விலையில் தக்கை பூண்டு
X
மதுரை மாவட்டத்தில் தக்கை பூண்டு மானிய விலையில் அளிக்கப்படுவதாக வேளாண்மை துறை அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடியில் செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மண்ணின் தன்மை மாறி வருகிறது. இதை தவிர்க்க தக்கை பூண்டு விதைகளை விதைத்து 45 நாட்களில் வளர்ந்து பூப்பூக்கும் நிலையில் செடிகளை அதே நிலத்தில் உழுது உரமாக பயன்படுத்தலாம். தக்கை பூண்டு விதைகள் மானியத்தில் வழங்கி வருகிறோம். ரேஷன் கார்டு, ஆதார் நகல், பட்டாவுடன் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார்.
Next Story