நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் எம்எல்ஏ பங்கேற்பு

மதுரை திருமங்கலம் பகுதியில் நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையிணை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்பி உதயகுமார் கலந்துகொண்டு துவக்கி வைத்தார் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லூர் கிராமத்தில் மயானஎரிமேடை 5 லட்சம் மதிப்பீட்டிலும் குளியல் தொட்டி 4 லட்சம் மதிப்பீட்டிலும் பேவர் பிளாக் சாலை 4 லட்சம் மதிப்பீட்டிலும் புளியங்குளம் கிராமத்தில் குளியல் தொட்டி 4 லட்சம் மதிப்பீட்டிலும் காசிபுரம் கிராமத்தில் பேப்பர் பிளக்ஸ் சாலை மூன்று லட்சம் அமைப்பதற்கான பூமி பூஜை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் முன்னதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமாருக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்
Next Story