ஊழலுக்குப் பின்புலத்தில் உள்ளவர் யார்? முன்னாள் அமைச்சர் கேள்வி

X
மதுரை மாநகராட்சி நடைபெற்ற ஊழலுக்கு பின்புலத்தில் இருப்பவர் யார் என்று கேள்வி கேட்டு மதுரை திருமங்கலம் எம்எல்ஏ உதயகுமார் அவர்கள் இன்று (ஜூலை.25) வெளியிட்டுள்ள வீடியோவில் கேள்வி எழுப்பி உள்ளார். மதுரை மாநகராட்சி வரலாற்றிலே இப்படி ஐந்து மண்டல தலைவர்கள் ஊழலுக்காக, மக்கள் பணத்தை கையாடல் செய்தற்காக ராஜினாமா செய்த வரலாறு மதுரை மாநகராட்சியில் இதுவரை பார்த்தது இல்லை? தற்போது எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு கழக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த அடிப்படையில் இன்றைக்கு நீதியரசர்கள் உயர்நிலை ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலே குழு அமைத்து உண்மையை வெளிகொண்டு எடுத்துள்ளார்கள். வர நடவடிக்கை இந்த குற்றத்திற்கு பின்புலமாக இருக்கும் உண்மை குற்றவாளிகள் யார்? இது சாதாரணமாக நடைபெற்று இருக்கிற முடியாது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
Next Story

