அரியூர்பட்டியில் ஆடி மாத திருவிழா
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சருகு வலையபட்டி சேகரம், அரியூர்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன், ஸ்ரீ மணிச்சூரன் சுவாமி, ஸ்ரீ காக்கர கருப்புச்சாமி திருக்கோவிலின் 18ம் ஆண்டு ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு ஏழு தாய் மக்கள் வத்ரான் முத்தரி மூன்று கரைகாரர்கள் நடத்தும் ஆடி மாததிருவிழா இன்று (ஜூலை.25)நடைபெற்றது. வீரகாளியம்மன் , மணிச்சூரன் மந்தையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு எடுத்து சூலப்பிடாரி அம்மன், மணிச்சூரன்,காக்கர கருப்புச் சாமி கோவிலுக்கு சென்று அம்மனுக்கு விசேஷ பூஜை செய்து மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். சாமியாட்டம் நடைபெற்றது. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அன்னதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. அருகில் சுற்றுப்புற கிராமங்களான சருகு வலையப்பட்டி, அரியூர்பட்டி, வடக்குவலையப்பட்டி, மெய்யப்பன்பட்டி, மணப்பட்டி, ஒத்த பட்டி, லெட்சுமிபுரம், அண்ணா நகர் ஆகிய கிராமங்களிலிருந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாட்டினை சருகுவலையபட்டி சேகரம், அரியூர்பட்டி, கிராம பொதுமக்கள், வத்ரான் வகையறாவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story





