தளவாபாளையம்- அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் நேற்று வழக்கு பதிவு.
தளவாபாளையம்- அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் நேற்று வழக்கு பதிவு. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் வயது 53. இவர் ஜூலை 9ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கரூர் -சேலம் சாலையில் அவரது காரில் சென்றார். இவரது கார் தளவா பாளையம் தனியார் ஓட்டல் அருகேசென்றபோது , இவருக்கு முன்பாக நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்பிரமணிய கோவில் தெருவை சேர்ந்த திருஞானம் வயது 56 வேகமாக சக்திவேல் காரை தனது காரில் முந்தி சென்றார். அப்போது திடீரென எவ்வித சிக்னாலும் வெளிப்படுத்தாமல் பிரேக்கிட்டதால் சக்திவேலின் கார் திருஞானத்தின் காரின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது கர்நாடகா பதிவெண் கொண்ட மற்றொரு கார் சக்திவேலின் காரின் பின்னால் மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சக்திவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து குணமடைந்து வீடு திரும்பினார். இது தொடர்பாக சக்திவேல் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்ட வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் நேற்று மாலை திருஞானம் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story





