பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

X
Pallipalayam King 24x7 |25 July 2025 7:11 PM ISTபள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா , மருத்துவர் அன்புமணி அவர்களின் மக்கள் உரிமை மீட்பு எழுச்சி பயணம் வெற்றி பெற வேண்டும் மற்றும் பசுமை தாயகம் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சியாக நாமக்கல் மேற்கு மாவட்ட ஒன்றிய மற்றும் நகரம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் மதன் என்கின்ற வேல்முருகன் தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர் மூர்த்தி , மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் , மாவட்ட தொழிற்சங்க தலைவர் மூர்த்தி, மாவட்ட வன்னியர் சங்கத் துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல் , மாவட்ட தொழிற்சங்க செயலாளர் தெய்வ மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் விக்கி, மாவட்ட தொழிற்சங்க தலைவர் கோடீஸ்வரன் மற்றும் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.டி ராஜேந்திரன், நகர தலைவர் பாண்டியன், ஒன்றிய தலைவர் ஜெயமுருகன், ஒன்றிய மாணவரணி தலைவர் வாசுதேவன், நகர கொள்கை விளக்க அணி செயலாளர் மணி, ஒன்றிய பொறுப்பாளர் சங்கர் ,தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர் ...
Next Story
