இல்லங்கள் அனைத்தும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி கட்டாயம் பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்

X
குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் உள்ளிட்ட அனைத்து இல்லங்களும்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் உள்ளிட்ட அனைத்து இல்லங்களும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி கட்டாயம் பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, குழந்தைகள் நலன் (ம) சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள், இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம். 2015 என்ற சட்டபிரிவின் கீழ் https://dsdcpimma.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் அல்லது மாவட்ட குழந்தை நல அலுவலகத்திலும், சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்கள், மூத்த குடிமக்களுக்கான சட்டம். 2007 என்ற சட்டபிரிவின் கீழ், https://www.tnesevai.tn.gov.in/ (SimpleGov Registration) என்ற இணையதள முகவரியிலும் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்திலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 என்ற சட்டப்பிரிவின் கீழ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், சமூக நலத் துறை கீழ் செயல்பட்டு வரும் பெண்கள் (ம) குழந்தைகளுக்கான விடுதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான (ஒழுங்குமுறை) சட்டம், 2014 என்ற சட்டபிரிவின் கீழ் https://tnswp.com என்ற இணையதள முகவரியிலும் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாக விண்ணப்பித்திட வேண்டும். மேலும் தமிழ்நாடு மாநில மன நல ஆணையம் (State Mental Health Authority) கீழ் செயல்பட்டு வரும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள், மன நல பாதுகாப்பு சட்டம், 2017 என்ற சட்டபிரிவின் கீழ் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதள முகவரியிலும் அல்லது முதன்மைச் செயல் அலுவவர் தமிழ்நாடு மாநில மன நல ஆணையம் அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை கீழ்ப்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக மேற்காணும் இணையதளம் (Portal) / அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story

