அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் தொடர்பாகவும், குழந்தை பாதுகாப்பு, சுகாதாரம் குறித்தும் போதை பொருள்கள் தடுப்பு, போக்சோ சட்டம் உட்பட பல்வேறு கூட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உதவி ஆசிரியர் மைனாவதி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செல்வி,சரண்யா உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
பெரம்பலூர் அருகே செங்குணம் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது. பெரம்பலூர் வட்டம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25-07-2025 இனறு பிற்பகலில் 2025-26 ஆம் ஆண்டிற்கான முதல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அமுதா தலைமை வகித்தார். மேலாண்மை குழு தலைவர் அனிதா முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் தொடர்பாகவும், குழந்தை பாதுகாப்பு, சுகாதாரம் குறித்தும் போதை பொருள்கள் தடுப்பு, போக்சோ சட்டம் உட்பட பல்வேறு கூட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உதவி ஆசிரியர் மைனாவதி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செல்வி, சரண்யா உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story