ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..

X
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் குறுக்கே கார் நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறு நண்பனுக்கு ஆதரவாக பேசிய இளைஞரை ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் பகுதியில் தெக்குபட்டு பகுதியை சேர்ந்த ரோஷன் (வயது 19) என்பவர் இருசக்கர வாகனத்தில் புத்துக்கோவில் பகுதியில் உணவு வாங்குவதற்காக உணவகம் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்போது அவ்வழியாக வந்த புத்துகோயில் பகுதியைச் சேர்ந்த தினகரன் மற்றும் நண்பர்கள் வந்த கார் இருசக்கர வாகனம் அருகே நிறுத்தி உள்ளனர். இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற ரோஷன் இடம் காரில் வந்த தினகரன் மற்றும் அவர் நண்பர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக பிக்கப் வாகனத்தில் தெக்குபட்டுப் பகுதியைச் சேர்ந்த ரோஷன் நண்பர் லோகநாதன் (வயது 21) என்பவர் என்ன தகராறு என கேட்டுள்ளார். இப்போது ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகளப்பாக மாறி உள்ளது. அதன் பிறகாக லோகநாதன் மூன்று பேர் தாக்கியுள்ளனர் அதன் பிறகு தினகரன் போன் செய்து மேலும் 3 நபர்களை வரவழைத்து லோகநாதன் ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் இரண்டு தரப்பிலும் தினகரன் மற்றும் லோகநாதன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர் இது தொடர்பாக அம்பலூர் காவல்துறையினர் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோகநாதனை ஆறு பேர் கொண்ட கும்பல் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

