அகதிகள் முகாமில் புது மாப்பிள்ளை தற்கொலை

அகதிகள் முகாமில் புது மாப்பிள்ளை தற்கொலை
X
களியக்காவிளை
குமரி மாவட்டம் கோழிவிளை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் பினோட்சன் (28). தொழிலாளி. இவர் மோனிஷா (25) என்பதை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.  பினோட்சன் வேலைக்கு செல்லாமல், அடிக்கடி இரவு நேரங்களில் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பினோட்சன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கலியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story