சித்தப்பா மீது கொலை வெறி தாக்குதல் உயிரிழப்பு

X
திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நாகராஜ்(57) இவரது அண்ணன் முருகேசன் இருவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன் விரோதத்தில் கடந்த திங்கட்கிழமை யுவராஜ்(32), தாமோதரன்(23), ராஜ்(21), மணிகண்டன்(20) ஆகிய 4 பேரும் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் நாகராஜ் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட யுவராஜ், தாமோதரன், ராஜ், மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கொலை முயற்சி வழக்கு என்று பதிவு செய்யப்பட்டதை தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

