மரத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

X
திண்டுக்கல் சிலுவத்தூர் ரோடு ஜம்புளியம்பட்டியை சேர்ந்த முத்தன் மகன் மணிகண்டன்(34) இவர் புளிய மரத்தின் ஏறிய போது மேலிருந்து கீழே தவறி விழுந்து காயம் அடைந்தார். உறவினர்கள் மீட்டு மணிகண்டனை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

