கங்கைகொண்ட சோழபுரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் பிரகதீஸ்வரர் கோவில் மிண்ணொளியில் மிளிரும் கோபுரத்தில் முன் நின்று செல்பி எடுத்து மகிழும் பொதுமக்கள்

X
அரியலூர், ஜூலை.26- அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாக 5 நாள் கொண்டாடப்படுகிறது கடந்த 23ஆம் தேதி தொடங்கிய விழாவின் கடைசி நாளான 27ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தருகிறார் அவர் பிரகதீஸ்வரரை வழிபட்டு பின்னர் நடைபெறும் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசையில் திருவாசகம் இசை நிகழ்ச்சியை கண்டு ரசிக்கிறார் மேலும் ஓதுவார்கள் நாயன்மார்களின் நிகழ்ச்சியையும் கண்டுணரும் பிரதமர் சிறப்பு உரையாற்றுகிறார் பிரதமரின் வருகையை ஒட்டி கங்கைகொண்ட சோழபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது பிரகதீஸ்வரர் ஆலயத்தை சுற்றி வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு கோவிலின் கோபுரம் மின்விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது மேலும் கோவில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மின்னொழியில் ஒளிரும் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் கோபுரத்தின் முன் நின்று தங்கள் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர் மேலும் ஆங்காங்கே உள்ள வண்ண வண்ண மின் விளக்குகள் முன்பு அமர்ந்து மகிழ்ந்து வருகின்றனர் மேலும் கோவில் வளாகத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியையும் ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர் பிரதமரை வரவேற்க கங்கைகொண்ட சோழபுரம் மட்டுமின்றி அரியலூர் மாவட்டமே தயாராகி வருகிறது
Next Story

