அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் பிரதமர் நரேந்திர மோடி இறங்க உள்ள தளத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் இடம் மாற்றம்

அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் பிரதமர் நரேந்திர மோடி இறங்க உள்ள தளத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் இடம் மாற்றம்
X
அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் பிரதமர் நரேந்திர மோடி இறங்க உள்ள தளத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரியலூர், ஜூலை.26- அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலை அமைத்து தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை முன்னிட்டு முப்பெரும் விழாவாக மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ஐந்து நாட்கள் விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இன்று ஹெலிகாப்டர் இறக்கி ஒத்திகை நடைபெற்றது. இதில் ஹெலிகாப்டர் இறங்குவதில் சிரமம் இருந்த காரணத்தினால் அருகே உயர் மின்னழுத்த கம்பிகளில் சிறந்த காரணத்தினாலும் இடத்தை மாற்ற முடிவு செய்து தற்பொழுது பொன்னேரியில் இரவோடு இரவாக ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story