உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் ஆய்வு

X
அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்று பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தூத்துக்குடி மாநகரம் - 18, 33 மற்றும் 34 ஆகிய வார்டுகளுக்கு பி.எம்.சி. பள்ளியை வளாகத்தில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முகாமில் மின் இணைப்பு பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு உடனடியாக அதற்குரிய ஆவணத்தை வழங்கினார். 24.07.2025 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இம் முகாமில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப மனுக்கள் 985, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த மனுக்கள் 186, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த மனுக்கள் 51, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மனுக்கள் 97, எரிசக்தி துறை மனுக்கள் 54, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மனுக்கள் 49 உட்பட மொத்தம் 1537 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் மாநகராட்சி உதவி ஆணையர் பாலமுருகன், தாசில்தார் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதிச் செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் ஜான் சீனிவாசன், பொன்னப்பன், சந்திரபோஸ், வட்டச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, சுரேஷ், சரவணன், வட்டப் பிரதிநிதி வேல்முருகன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

