சேலத்தில் ஆடி பண்டிகையை முன்னிட்டு

சேலத்தில் ஆடி பண்டிகையை முன்னிட்டு
X
அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சி
சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பரம்பரை காணியாச்சிகாரர்கள் செல்வம், பைந்தமிழ் வேந்தன், கோவில் அர்ச்சகர் வேதமூர்த்தி, திருநாவுக்கரசு ஆகியோர் கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். நடுத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்பட முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் அவர்கள் கோவிலில் கம்பம் நட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், கென்னடி, ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் 5-ந் தேதி கோவிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி, 6-ந் தேதி உருளுதண்டம் மற்றும் பக்தர்கள் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், 7-ந் தேதி வண்டி வேடிக்கை, 10-ந் தேதி சத்தாபரணமும் நடைபெறுகிறது.
Next Story