காளிகவுண்டம்பாளையத்தில் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

காளிகவுண்டம்பாளையத்தில் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்
X
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசின் பிறந்தநாளையொட்டி, மகுடஞ்சாவடி ஒன்றியம் காளிகவுண்டம்பாளையம் தாய்மடி அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் மாவட்ட இளைஞர் சங்க துணைச்செயலாளர் வினோத்தின் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் பச்சமுத்து, மாவட்ட தலைவர் தொப்பா கவுண்டர், மாநில பொறுப்பாளர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு முதியோர் இல்லத்தில் உணவு வழங்கினர். இதையடுத்து மரக்கன்றுகள் நடப்பட்டன. பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து கொங்கணாபுரம், எடப்பாடி, ஜலகண்டாபுரம், சின்ன பிள்ளையூர் ஆகிய பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
Next Story