ஆற்காடு அருகே வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற வாலிபர்கள் கைது

ஆற்காடு அருகே வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற வாலிபர்கள் கைது
X
வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற வாலிபர்கள் கைது
ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.அதில் அவர்கள் கீராம்பாடி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 22), கவி சாண்ட்லின் (22), வாலாஜாபேட்டையை அடுத்த குடிமல்லூர் பகுதியை சேர்ந்த ராகுல் (23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய சோதனையில் 66 போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றையும் இருசக்கர வாகனத் தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வலி நிவாரணி மாத்திரைகளை சென்னையில் இருந்து வாங்கி செய்யாறு வழியாக ஆற்காடிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. இது குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து வாலாஜாபேட்டை கோர்ட் டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story