சேலம் கொங்கு மெட்ரிக் பள்ளியில் மாணவர் தலைவர்கள்

சேலம் கொங்கு மெட்ரிக் பள்ளியில் மாணவர் தலைவர்கள்
X
பதவி ஏற்பு விழா
சேலம் வெள்ளாளப்பட்டி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவர் தலைவர், துணைத்தலைவர், 4 மாணவர் அணி தலைவர்கள், துணைத்தலைவர்கள் பதவி ஏற்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைவர் எஸ்.முத்துராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.நடராஜன், பொருளாளர் வி.பி.சின்னமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஷ் கலந்து கொண்டு மாணவர் தலைவர், துணைத்தலைவர்கள், அணித்தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான பேட்ஜ்கள் வழங்கினார். தொடர்ந்து போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்தார். இந்த விழாவில் பள்ளி துணைச்செயலாளர்கள் என்.எஸ். ஜெயவேல், எஸ்.ராஜமாணிக்கம், பள்ளி முதல்வர் எம்.பி.சர்மிளா, நிர்வாக அலுவலர் எஸ்.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story