சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு
X
தீர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் தொடர்பான மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் சரி செய்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பொதுப்பிரச்னையில் இரு தரப்பு சமாதனக் கூட்டம் நடத்துதல், மயானம் அமைத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதனைடுத்து, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் பிரச்னைகளுக்கு துறை அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிப்பு தொடர்பான நேரங்களில் அமைதி நிலை நாட்டும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உட்பட போலீஸ் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
Next Story