மாயனூர் அருகே கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழப்பு.

மாயனூர் அருகே கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழப்பு.
மாயனூர் அருகே கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள மணவாசி பகுதியில் கட்டிட வேலைகளை முடித்துவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் கொத்தனார் சுரேஷ்குமார் மற்றும் சித்தாள் சித்ரா, ராமாயி உட்பட மூன்று பேர் வீடு திரும்பும் வழியில் மாயனூர் மின்வாரிய அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் 35 என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற பேருந்தை முந்திக் கொண்டு செல்ல முயன்ற பொழுது எதிரே தனபால் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மோதி மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கை கால்கள் சிதறி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ரஞ்சித் என்பவரை விசாரணைக்காக மாயனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். கரூர் அருகே சாலை விபத்தில் மூன்று தொழிலாளிகள் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story