இடுகாடு செல்ல பாதையில்லாமல் தவிக்கும் மக்கள்

X
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள சாட்டு புதூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர் நேற்று இறந்ததை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்க்கு அவரது உறவினர்களும் ஊர் மக்களும் சேர்ந்து வழக்கம் போல் அடக்கம் செய்யும் கல்லறைதோட்டத்திற்க்கு அவரது பூத உடலை கொண்டு சென்றனர்கள். சீதப் பாலில் இருந்து தெள்ளாந்திசெல்லும் சாலையில் அந்த இடுகாடு அரசியர் கால்வாயை அடுத்து அமைந்துள்ளது. அந்த கால்வாயை கடந்து செல்ல பாலங்கள் இல்லாமல் அப்பகுதி மக்கள் கால்வாயின் உள்ளே இறங்கி மறுபடியும் அந்த புறமுள்ள மேட்டு பகுதிக்கு சென்று தான் கல்லறைதோட்டத்தை அடைய முடியும். மழை காலங்களில் அந்த கால்வாயை கடந்து செல்ல மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
Next Story

