கோவை: சொக்கம்புதூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பை எதிர்த்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் !

X
கோவை சொக்கம்புதூரில் மயானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் நேற்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்ததால் டவுன் ஹால் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் கூறுகையில், மாநகராட்சியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், நிலையம் அகற்றப்படாவிட்டால் மக்களிடம் கையெழுத்து பெற்று பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர்.
Next Story

