வைகோவை இன்றைய தலைமுறை அறிய வேண்டும் - துரை வைகோ பேச்சு !

வைகோவை இன்றைய தலைமுறை அறிய வேண்டும் - துரை வைகோ பேச்சு !
X
கோவை விமான நிலையத்தில், மதிமுக முதன்மைச் செயலாளர் மற்றும் திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.
கோவை விமான நிலையத்தில், மதிமுக முதன்மைச் செயலாளர் மற்றும் திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களிடம் நேற்று பேசியது முக்கியத்துவம் பெற்றது. அதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற பதவி நேற்றுடன் முடிவடைந்தது என தெரிவித்தார். கலைஞர் கருணாநிதியால் நாடாளுமன்றம் சென்ற வைகோ, 30 ஆண்டுகளாக 12 பிரதமர்களுடன் பணியாற்றி, பல்வேறு சாதனைகள் புரிந்தவர் என குறிப்பிட்டார். மே 1-ஆம் தேதி விடுமுறைக்கு காரணமாக இருந்தது வைகோவின் உரைதான் என்றும், NLC தனியார்மயம், ரயில்வே டிடிஆர் வசதி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வலியுறுத்தியவர் வைகோ எனச் சொன்னார். மாநிலங்களவைக்கு 4வது முறையாக வைகோவை அனுப்பிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். இன்றைய தலைமுறை வைகோவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மல்லை சத்யா விவகாரத்தை நாம் கடந்துவிட்டோம், அவரைப் பற்றி பேச விரும்பவில்லை எனவும், மக்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்து பேசுவோம் எனவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் சீட் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், இரட்டை இலக்க தொகுதிகள் குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டேன் என்றும் கூறினார். அதிமுக தலைவர் எடப்பாடியின் குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சித் தலைவர் என்பதாலேயே உள்ள நிலை எனவும், அதிமுக கருத்தாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Next Story