ஏலகிரி மலையில் கரடி உலா பொதுமக்கள் பீதி...!*
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் கரடி உலா பொதுமக்கள் பீதி...! திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலையின் 12 வது வளைவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை கரடிகள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி வனத்துறையினர் விசாரணை திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஏலகிரி மலையில் வியாபாரம் முடித்துவிட்டு கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு ஏலகிரி மலையிலிருந்து வக்கணம்பட்டி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ஏலகிரிமலையின் 12 வது வளைவில் உள்ள சாலையில் கரடி ஒன்று படுத்து இருந்துள்ளது. மற்றொரு கரடி அருகே நின்று கொண்டிருந்ததுள்ளது. அப்போது கிருஷ்ணமூர்த்தி இருசக்கர வாகனத்தில் வந்தபோது சாலையில் படுத்திருந்த கரடி கிருஷ்ணமூர்த்தி மீது சீறி பாய்ந்துள்ளது. அதில் கிருஷ்ணமூர்த்திக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கிருஷ்ணமூர்த்தி கத்திகூச்சலிட்டுள்ளார்.அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கரடியை விரட்டியுள்ளனர். அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் வக்கண பட்டியிலிருந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிகண்டனுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ்வர காலதாமதமானதால் வக்கணப்பட்டி பகுதியிலிருந்து விரைந்து வந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலல் அறிந்து வந்த வன அலுவலர் அண்ணாமலை மற்றும் தமிழன் ஆகியோர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story



