கரூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கரூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கோவை கங்கா மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் மெட்ரோ போலீஸ் மற்றும் கரூர் ரவுண்ட் டேபிள் கிளப் இணைந்து மூன்றாவது வருடமாக நடத்திய மருத்துவ முகாம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சரஸ்வதி வெங்கட்ராமன் மஹால் வளாகத்தில் நடைபெற்றது. இன்று துவங்கி நாளை வரை நடைபெறும் இந்த முகாமில் மார்பக புற்றுநோய் , சர்க்கரை நோய் , தீக்காயம் , உதடு பிளவு , அன்னப் பிளவு , உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. காலை 8:30 மணி துவங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மருத்துவர் குமணன் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்குகிறார். முகாமை நாகராஜ் ஒருங்கிணைப்பு செய்தார்.
Next Story