கரூர்- தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவருக்கு பணி ஆணை வழங்கினார் ஆட்சியர்.

கரூர்- தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவருக்கு பணி ஆணை வழங்கினார் ஆட்சியர்.
கரூர்- தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவருக்கு பணி ஆணை வழங்கினார் ஆட்சியர். கரூர் அடுத்த தாந்தோணி மலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இன்று கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் முகாம் அமைத்து தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பட்டதாரிகள்,இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்பு முடித்தவர்கள் என ஏராளமானோர் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். பல்வேறு நிறுவனங்கள் நேர்காணல் செய்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன்,மகளிர் திட்ட இயக்குனர் தனசேகரன் ,மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஜோதி ,கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ் மற்றும் கோல்டு ஸ்பாட் ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள் , அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Next Story