பதேசிய நெடுஞ்சாலையில் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.

X
Paramathi Velur King 24x7 |26 July 2025 6:38 PM ISTபதேசிய நெடுஞ்சாலையில் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலுார், ஜூலை 25: பரமத்திவேலூரில் கரூர் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை அதே இடத்தில் மீண்டும் அமைக்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமத்தி வேலூரில் கரூர் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இருவேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. எனவே, தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கப்பட்டதால் மக்கள் பயன்பாட்டில் இருந்த பயணிகள் நிழற்கூடம் அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கிடையே பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட வெள்ளாளப்பாளையம் பகுதியில் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததை அறிந்த மறவாபாளையம், வெள்ளாளபாளையம், ஓவியம்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பழைய இடத்திலேயே நிழற்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதையடுத்து பழைய இடத்திலேயே நிழற்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியர் முத்துக்குமாரிடம் மனு அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பழைய இடத்திலேயே நிழற்கூடம் அமைக்கும் பணி தொடங்கியது. இதையறிந்த மற்றொரு தரப்பினர் நிழற்கூடம் புதிதாக வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என வாக்குவாதம் செய்து பணியை நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த பரமத்தி வேலுலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கீதா, வட்டாட்சியர் முத்துக்குமார் ஆகியோர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பயணிகள் நிழற்கூடம் பழைய இடத்திலேயே அமைப்பதற்கான பணி தொடங்கியது.
Next Story
