ராஜா வாய்க்கால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி.

X
Paramathi Velur King 24x7 |26 July 2025 6:42 PM ISTபரமத்தி வேலூர் பேரூராட்சி 17-வது வார்டில் ராஜா வாய்க்கால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி.
பரமத்திவேலுார், ஜூலை. 26- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு ராஜா வாய்க்கால் கரையோரம் உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இன்று அதிகாலை 3 மணி அளவில் ராஜா வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களின் வீட்டிலிருந்த மளிகை பொருட்கள் மற்றும் தரைத்தளத்தில் இருந்த துணிமணிகள் மற்றும் இதர பொருட்கள் நீரில் நனைந்தது. உடனடியாக அப்பகுதி இளைஞர்கள் பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ராஜா வாய்க்கால் நீர் திறப்பு பகுதியில் நீர் குறைத்து வரவும், மாற்று வழிகளில் நீர் வெளியேற்ற ஏற்பாடு செய்தனர். இதனால் 4 மணி நேரம் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்தனர். காலை 9 மணி அளவில் தண்ணீர் வடிந்ததால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர் பாதிக்கப்பட்ட பகுதியை பரமத்தி வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், சுகாதார அலுவலர் செல்வகுமார் மற்றும் கவுன்சிலர்கள் பார்வையிட்டு இதே போல் மீண்டும் தண்ணீர் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
Next Story
