நாட்றம்பள்ளி அருகே ஆற்றில் அனுமதி இன்றி மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் ! ஒருவரை கைது!

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆற்றில் அனுமதி இன்றி மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் ! ஒருவர் கைது தப்பி ஓடிய மற்றொருவரை நாட்றம்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர்* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் அனுமதி இன்றி ஆற்றில் கள்ளத்தனமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான போலீசார் புதுப்பேட்டை அருகே உள்ள கல்நார்சம்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர் அப்போது டிப்பர் லாரியில் மணல் கடத்திக் சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் சுற்றிவளைத்த நிலையில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் மற்றொரு வாலிபரை கைது செய்து 3 யூனிட் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசனை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்
Next Story

