மாநகராட்சி அலட்சியம் - நாம் தமிழர் கட்சி புகார்!

மாநகராட்சி அலட்சியம் - நாம் தமிழர் கட்சி புகார்!
X
தூத்துக்குடியில் சாலையைவிட 4 அடி உயரத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் சாலையைவிட 4 அடி உயரத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடரபாக நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் லூர்தம்மாள் புரம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் சாலை மட்டத்தை விட 4 அடி உயரமாக உள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் பாதிக்கப்படுகின்றனர். காய்கனி வண்டி, மாநகராட்சி குப்பை வண்டி, கார் போன்ற வாகனங்கள் அவ்வழியே செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பலர் கீழ விழுந்து காயம் அடைகின்றனர். இது தொடர்பாக 8 மாதங்களாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி ஆணையர் இப்பகுதியை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story