விமான நிலையத்தில் புதிய முனையம் : பிரதமா் திறந்து வைத்தார்
மாலத்தீவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மோடி, பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார். மாலத்தீவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் தூத்துக்குடி வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் முருகன், ராம் மோகன் நாயுடு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து தொடர்ந்து ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் வழித்தட பணி, மதுரை-போடிநாயக்கனூர் ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம், கூடங்குளம் யூனிட் 3, 4-ல் மின்சாரம் எடுப்பதற்கான மின்பகிர்மான அமைப்பு தொடக்கம், ரூ.283 கோடி மதிப்பிலான ஆரல்வாய்மொழி-நாகர்கோவில், நெல்லை-மேலப்பாளைய்ம் இருவழிப்பாதை திட்டம், சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலை திட்டம், வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.285 கோடியில் 3-வது வடக்கு சரக்கு தளவாட நிலையம் திறப்பு, நாகர்கோவில் நகரம்-சந்திப்பு-கன்னியாகுமரி இடையே இரட்டை ரெயில் பாதை திட்டம், ரூ.1,030 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள் உள்பட தமிழகத்தில் நிறைவுற்ற ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளத்துறை அமைச்சர் லலிதா ஆர் ராதா கிருஷ்ணன், பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், தூத்துக்குடி விமான நிலைய அதிகாரி ஜெயக்குமார், மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, திமுக மாவட்ட முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் பில்லா ஜெகன், திமுக வர்த்தக அணி மாநில நிர்வாகி உமரி சங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழில் வணக்கம் எனக் கூறி பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கி ஹிந்தியில் பேசினார். மொழிப்பெயர்பாளர் உதவியுடன் அவரது உரை உடனுக்குடன் தமிழாக்கம் செய்யப்பட்டது.
Next Story



