உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஆய்வு செய்த அமைச்சர்

X
செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சியில் 9 மற்றும் 10 ஆகிய வார்டுகளுக்காக உங்களுடன் ஸ்டாலின் நடைபெற்றது. கூடுவாஞ்சேரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா,இ.ஆ.ப., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்,நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம் கே . . கார்த்திக் தண்டபாணி, துணைத் தலைவர் லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள்,நகர மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

