ராமநாதபுரம் ஆசிரியர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் அதில் கடந்த 16 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த முன்னூத்தி பதினோராவது வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் சம வேலை சம கல்வி சம பதவியில் உள்ளவர்களுக்கு ஒரு சம்பளமும் தங்களுக்கு அதைவிட குறைவான சம்பளமும் வழங்குவதை எடுத்துரைத்து கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக தெரிவித்து இதுவரை நிறைவேற்றாததால் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் தமிழக அரசு உடனடியாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களை அழைத்து பேசி சுமுகமான தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் படும் என எச்சரிக்கை விடுத்தனர் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை தெரிவித்தனர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பூமி நாகு, முத்துச்சாமி வினோத் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story