ராமநாதபுரதம் பகுதிநேர நாட்டுப்புற கலைபயிற்சி மாணவர்களுக்கு பல்கலைக்கழகத் தேர்வு நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம்தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறை, மதுரை கலைபண்பாட்டுமையம், இராமநாதபுரம் மாவட்ட பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மையத்தின் 2024-2025-ம் ஆண்டுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்று தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி பல்கலைக்கழகத்தின் சார்பில் செயல்முறை தேர்வுகள் ராமநாதபுரம் D D விநாயகர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கரகாட்டம் 11, கிராமிய பாடல் 20, ஒயிலாட்டம் 37, என மொத்தம் 151 மாணவர்கள் 2024-2025 ஆண்டில் பயின்ற நிலையில் செயல்முறை தேர்வு எழுதும் மாணவர்கள் சிலம்பாட்ட, ஒயிலாட்டம் கரகாட்டம் கிராமிய பாடல் ஆகிய பிரிவுகளில் 86 மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகள் நடைபெற்றது, இதில் தேர்வாளர்களாக நாட்டுப்புற கலைபயிற்சி ஆசிரியர் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இராமேஸ்வரம் கதிர்வேல், கலைசுடர்மணி செல்வராணி, கலைநண்மணி இராமமூர்த்தி ஆகியோர்கள் நடத்தினார்கள் இவர்களுடன் புறத்தேர்வாளர்கள் பகுதிநேர நாட்டுப்புற கலைபயிற்சி மையத்தின் ஒயிலாட்ட ஆசிரியர் இராமகிருஷ்ணன், கரகாட்ட ஆசிரியர் பாண்டியம்மாள், கிராமிய பாடல் ஆசிரியர் இருளாண்டி, சிலம்பாட்ட ஆசிரியர் தனசேகரன் ஆகியோர்கள் கலந்துகொண்டு தேர்வுக்கான வழிமுறைகளை செய்தார்கள். ஒருங்கிணைப்பாளர் மு.லோகசுப்பிரமணியன் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
Next Story





