ராமநாதபுரம் குரு வட்டார விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன

X
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றறன. இதில் 17, 19 வயது பிரிவினருக்கான கபடி, கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் 12}க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 17 வயதுக்குள்பட்ட பெண்கள் கபடிப் போட்டியில் கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது. 19 வயது பிரிவினருக்கான கபடிப் போட்டியில் அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியினர் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்வானதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். முன்னதாக, கபடிப் போட்டியை ராமசாமிபட்டி பள்ளியின் தலைமையாசிரியர் சிவ அருணா, மணற்கேணி செயலி மண்டல ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடல்கல்வி ஆசிரியை சாரதாதேவி போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார்.
Next Story

