ராமநாதபுரம் முனீஸ்வரர் ஆலய கோவில் திருவிழா நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனிஸ்வரர் ஆலய திருக்கோவில் 48 ம் நாள் மண்டலபூஜை விழாவை முன்னிட்டு அந்த கிராமத்தின் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இருந்து 108 பெண்கள் இளைஞர்கள் தப்பாட்டம் இசை வாத்தியங்கள் வானவேடிக்கைகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் பால்குடங்களை சுமந்து சென்று கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கிராம காவல் தெய்வங்களை சுற்றி வலம் சென்று முனிஸ்வரர் ஆலயத்திற்கு சென்றனர் அதனை தொடர்ந்து மூலவர் முனிஸ்வரர் சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் வழிபாடு செய்தனர்
Next Story

