ஹைட்ரோ கார்பன் திட்டம்; மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டம்;  மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
X
மேல் மிடாலம்
குமரி கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று மீனவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மீனவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மேல்மிடாலம் கடற்கரையில் நேற்று மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்பணியாளர் டன்ஸ்டன் தலைமை தாங்கினார். ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். முன்னதாக மேல்மிடாலம் ஆலயம், அந்தோனியார் குருசடி, எள்ளுவிளை போன்ற பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்து மக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
Next Story