நாம் தமிழர் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

X
தெற்கு கடல் எல்லையை சூழ்ந்து பயமுறுத்தி நிற்கும் ஆழ்கடல் ஹைட்ரோகார்பன் திட்டம். கரையில் தாது மணல், ஆழ்கடல் தாது மணல். புதிய இரயில் தடம் திட்டம் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் மக்கள் விரோத திட்டங்கள் கண்டித்து கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமோன், மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெயன்றீன் தலைமை வகித்தனர்.மாநில நிர்வாகி கிம்லர்,மாவட்ட செயலாளர் வக்கீல் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் கலந்து கொண்டு பேசினார்.தெற்கு மாவட்ட தலைவர் சேதுபதி உட்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story

