பயணிகள் நிழற்குடை அமைக்க பூமி பூஜை அமைச்சர் தொடங்கி வைத்தார்

X
தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால் அவதிப்பட்டு வந்தனர். நிழற்குடை வேண்டும் என தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை வைத்தனர். இதை கருத்தில் கொண்டு சட்டமன்ற உறுப்பினரும் மனிதவளத்துறை அமைச்சருமான என்.கயல்விழி செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8.35 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று கொண்டரசம்பாளையம் கிராமத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் பயணிகள் நிழற்குடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

