பிரதமர் மோடிக்கு மதுரை எம்பி கேள்வி.
மதுரை எம்.பி வெங்கடேசன் அவர்கள் நேற்று பிரதமர் மோடி அவர்கள் தூத்துக்குடியில் பேசிய உரைக்கு பதிலடியாக கேள்வி எழுப்பி அறிக்கையை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் “கடந்த ஆண்டு தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசாக வழங்கினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவிலேயே 3000 ஆண்டுகளுக்கு முந்தைய முத்துக்கள் அகழாய்வில் கிடைத்தது கீழடியில் மட்டுந்தான். வரலாற்றின் முத்தான கீழடி அறிக்கை ஒன்றிய அரசிற்கு கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அது ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை பிரதமரே என்று மதுரை எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
Next Story



