அரிய வகை வவ்வால்கள் வேட்டை

X
வவ்வால் இனங்களில் மிகவும் பெரியதும் அதிக எடையும் கூடிய இனமான இந்த இந்திய பறக்கும் நரி (Scientific Name:- Pteropus giganteus) என்கிற அரிய வகை இனம் இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம்-1972- ன் பாதுகாப்பு பட்டியல் -2ல் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வவ்வால் இனம் திண்டுக்கல் சிறுமலையில் உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமலை பழையூரை சேர்ந்த 2 நபர்கள் சிறுமலை அகஸ்தியர்புரம் அடுத்த தண்ணீர் பாறைமேடு அருகே EB-க்கு சொந்தமான மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் இருந்ததை தாக்கி கொன்று எடுத்துச் சென்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சிறுமலை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

