பேரூர் அருகே சிறுத்தை பிடிக்க கூண்டு வைப்பு !

பேரூர் அருகே சிறுத்தை பிடிக்க கூண்டு வைப்பு !
X
பேரூர் பகுதிகளில் சிறுத்தை வளம் வருவதால் அதை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மதுக்கரை வனச்சரகம் தீத்திபாளையம் அருகே சிறுத்தை ஒன்று தோன்றியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 22ம் தேதி வேனில் அய்யாசாமி மலைக்கு சென்றவர்கள், ஒரு சிறுத்தையைப் பார்த்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வைரலாகி, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, வனத்துறையினர் நேற்று மாலை தீத்திபாளையம் ஊருக்கு தெற்கே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். அதில் சிறுத்தைக்கு விருப்பமான உணவுகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது வனத்துறை சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.
Next Story