கோவை: டீ மாஸ்டரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது !

X
போத்தனூர் அருகே நஞ்சுண்டாபுரத்தில் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வரும் காமன் (54) என்பவரை கத்தி காட்டி மிரட்டிய வாலிபர், அவரிடம் இருந்து ரூ.5,000 மற்றும் செல்போனை பறித்துச் சென்றார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பாரதிநகர் பகுதியை சேர்ந்த ஷாருக்கான் (28) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story

