பிரதமர் மோடிக்கு எதிராக கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் !

X
பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்காமல் இருக்கின்ற மத்திய அரசை கண்டித்த அவர்கள், "NO RTE FUND NO ENTRY MODI" போன்ற பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர். இயக்க தலைவர் ஈஸ்வரன், “நீதிமன்ற தீர்ப்பும் இருந்தபோதும், கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது,” எனக் கூறினார். பிரதமரின் வருகை தமிழ்நாட்டிற்கு அவமானம் என்றும், அனைத்து கட்சிகளும் இக்காரணத்திற்காக சாலையில் இறங்கி போராட வேண்டுமென வலியுறுத்தினார். பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் தமிழ்நாட்டு குழந்தைகளின் கல்விக்காக என்ன பேசினீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், “கல்வியை நாசமாக்கதான் பாஜக இருக்கிறதா?” என விமர்சித்தார்.
Next Story

