தாங்கி பொதுக்குளம் துார்வாரி சீரமைப்பு

X
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், தாங்கி கிராமத்திற்கு சொந்தமான பொதுக்குளம், காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையையொட்டி, 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த குளம் அப்பகுதியை சுற்றி உள்ள விவசாய நிலங்களுக்கான நிலத்தடி நீர் ஆதாரமாகவும், அப்பகுதி கால்நடைகளுக்கு ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில், இந்த குளம் சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்மையால் துார்ந்து குளக்கரையும் பலவீனமாக உள்ளது. இதையடுத்து, இக்குளத்தை துார்வாரி சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தாங்கி பொதுக்குளத்தை சீரமைக்க, தனியார் தொண்டு நிறுவனம் ஹேண்ட் இன் ஹேண்ட் முன்வந்துள்ளது. தற்போது, அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் குளத்தை துார்வாருதல் மற்றும் குளக்கரையில் மண் கொட்டி பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
Next Story

